தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திடீர்சோதனையில் 20 மின்ஸ்கூட்டர், மின்சைக்கிள் ஓட்டுநர்கள் சிக்கினர்

1 mins read
e16ca8f9-0fe7-48fd-b1e9-adecf80f5b5c
தனிநபர் நடமாட்டச் சாதனங் களைப் பயன்படுத்துவோர் நடை பாதையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்திலும் பொதுப் பாதையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணம் செய் யுமாறு ஆணையம் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் நினைவூட்டியது. -

பொங்கோல் வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையில் 20க்கு மேற்பட்ட மின்ஸ்கூட்டர், மின்சைக் கிள் ஓட்டுநர்கள் பிடிபட்டனர்.

நிலப் போக்குவரத்து ஆணை யம், போலிஸ் படை, தேசிய பூங் காக் கழகம் ஆகியவற்றின் 60க்கு மேற்பட்ட அதிகாரிகள் இந்தத் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் 11 சாத னங்கள் பறிமுதல் செய்யப்பட்

டன என்றும் அவற்றில் ஒன்று 60 கிலோ கிராம் எடையுள்ள தனிநபர் நடமாட்டச் சாதனம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரி வித்தது.

60 கிலோ கிராம் எடை என்பது அனுமதிப்பட்ட சாதனத்தின் எடை யைக் காட்டிலும் மும்மடங்கு அதி கம்.

பொதுப் பாதையில் அனுமதிக் கப்படாத தனிநபர் நடமாட்டச் சாத னத்தை ஓட்டிய குற்றத்துக்காக வும் அந்தச் சாதனத்தை மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி வந்ததற்காகவும் அந்நபர் பிடிபட் டார்.

பூங்கா இணைப்புப் பகுதியில் தங்கள் சாதனங்களை விதிமுறை களுக்கு உட்படாமல் ஓட்டிவந்தவர் களை அதிகாரிகள் கண்

காணித்து பிடித்தனர்.