அச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்

கிராஞ்சி பகுதியில் கடந்த நான்காம் தேதி நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக உட்லண்ட்ஸ் பார்க் தனியார் வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூடுதல் பாதுகாப்புக் கோரியுள்ளனர்.

அந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் தனியாக வெளி யில் செல்ல வேண்டாம் என்று தனது குடும்ப உறுப்பினர் களிடையே கைபேசிகளில் குறுஞ் செய்திகள் வேகமாகப் பகிரப் பட்டதாகச் சொன்னார் 26 வயது சாரா தியாம்.

"நாங்கள் இப்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் மிகவும் அச்சம் கொண்டேன். அது எனக்குக்கூட நிகழ்ந்திருக் கலாம்," என்றார் அவர். திட்ட மேலாளராகப் பணிபுரியும் அவர், சம்பவம் நிகழ்ந்த சாலைப் பகுதி யில் தாம் அடிக்கடி மெதுவோட்டம் செல்வதுண்டு என்றார்.

அந்த வட்டாரத்தில் உள்ள சுமார் 150 தனியார் தரை வீடுகளில் குடியிருப்போர் சம்பவம் பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந் தனர். அக்கம்பக்கத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

டர்ஃப் கிளப் அவென்யூவில் இம்மாதம் நான்காம் தேதி அந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த தாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது சின்னையா கார்த்திக், பல்கலைக்கழக மாணவியை நள் ளிரவு 1.30 மணியளவில் அணுகி யதாகச் சொல்லப்படுகிறது.

அந்தச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்ணை அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் கார்த்திக் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் டர்ஃப் கிளப்புக்கும் கிராஞ்சி போர் நினைவிடத்துக்கும் இடையில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த தாகக் கூறப்படுகிறது.

அந்த நள்ளிரவு வேளையில் அந்தப் பெண் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்தாரா அல்லது வீட்டுக் குத் திரும்பிக்கொண்டிருந்தாரா, இது திட்டமிட்ட தாக்குதலா என்பது தெரியவில்லை.

"சிங்கப்பூரில் பாதுகாப்பை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள் கிறோம். மிக அரிதான சம்பவமாக இருந்தாலும் இது மிக அதிர்ச்சி அளிக்கிறது. என் 26 வயது மகளைப் பற்றிக் கவலைப்படு கிறேன்," என்றார் அந்தப் பகுதி யில் குடியிருக்கும் 50 வயதான வழக்கறிஞர் ஒருவர்.

டர்ஃப் கிளப் அவென்யூவில் பேருந்து நிறுத்தம் ஏதும் இல்லாத தால் நடைபாதை அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என் பது அந்தப் பகுதி குடியிருப்பாளர் களின் கருத்து. அந்தச் சாலையில் சிலர் மெதுவோட்டம், ஓட்டப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள் கின்றனர்.

அந்தப் பகுதிக்கு அருகில் சில வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. இந்த சம்பவம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மற்றொரு பயங்கரமான குற்றச் செயலை நினைவுபடுத்துவதாகச் சொன் னார் ஓய்வுபெற்ற நூலகர் ஜேக்குலின் யிப், 72.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!