முற்றிலும் ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்து தாமதமாகலாம்

முற்றிலும் ரொக்கமில்லாத பொதுப் போக்குவரத்துத் திட்டத்துக்கு 2020ஆம் ஆண்டுக்குள் மாற இயலாது என்று கூறப்படுகிறது.

வயதானவர்கள் உட்பட பயணி களின் அக்கறைகள் காரணமாக இந்தத் திட்டத்தை அடுத்த ஆண் டுக்குள் நடைமுறைப்படுத்துவது சிரமம் என சீன நாளிதழான லியன்ஹ வான்பாவ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசக் கொள்கையினையொட்டி 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிலப் போக்குவரத்து ஆணையமும் டிரான்ஸ்லிங்க் நிறு வனமும் முற்றிலும் ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்துத் திட் டத்தை அறிவித்தன. அது தொடர் பான கேள்விக்கு, படிப்படியாக நடைமுறைப்படுத்தும் போக்கு இந்த மாற்றத்தில் கையாளப்படும் என்றும் ரொக்கமில்லா பரிவர்த் தனைகள் எளிதாக்கப்படும் என் றும் நேற்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

புதிய நுழைவுச்சீட்டு எந்திரங் களுக்கான ஒப்பந்தப் புள்ளிக்கு ஆணையம் அழைப்புவிடுத்து உள்ளது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்