நவம்பர் 2ஆம் தேதி திறப்பு விழா காணும் கேன்பரா எம்ஆர்டி நிலையம்

புதிய கேன்பரா எம்ஆர்டி நிலை யம் இவ்வாண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று திறக்கவுள்ளது. நிலையத்திற்கான கட்டுமான வேலைகளை நேற்று பார்வையிடச் சென்ற போக்குவரத்து அமைச் சரும் உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கோ பூன் வான் இதை அறிவித் தார்.

செம்பவாங் நிலையத்திற்கும் ஈசூன் நிலையத்திற்கும் இடையே அமையவுள்ள கேன்பரா நிலை யம், திறந்த பின்னர் அவ்வட்டாரத் தில் உள்ள கிட்டத்தட்ட 17,000 குடும்பங்களுக்குப் பலனளிக் கும்.

தற்போதுள்ள கிழக்கு, மேற்கு எம்ஆர்டி ரயில் பாதையில் டோவர் நிலையத்தை அடுத்து அதே பாதையில் கட்டப்படும் இரண்டாவது நிலையம் கேன்பரா.

கேன்பரா நிலையத்திற்கும் அதன் அருகே உள்ள செம்பவாங் ஸ்பிரிங்ஸ், ஈஸ்ட்லிங்க், ஈஸ்ட்வேவ் போன்ற குடியிருப்பு வட்டாரங்களுக்கும் பத்து நிமிட நடைதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் நகருக்கோ ஜூரோங் ஈஸ்ட்டுக்கோ செல்லும் பயணிகளின் அன்றாடப் பயண நேரத்தில் பத்து நிமிடங்கள் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.

நிலையம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறந்திடும் என்று திரு கோ சென்ற ஆண்டே தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே நிலையத்தின் கட்டுமான வேலைகளில் கிட்டத் தட்ட 75 விழுக்காடு நிறைவடைந் திருப்பதால் நவம்பர் மாதம் நிலை யம் தன் கதவுகளைத் திறந்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிலையம் திறந்த பின் வாரநாட்களில் தேக்கா நிலையத் திற்குச் சென்றுவிட்டு கென்பரா கிரசென்டில் உள்ள தம் மகளின் வீட்டுக்குச் செல்ல எளிதாக இருக்கும் என்று திருவாட்டி சரளா, 65, கூறினார்.   

“டாக்சியை விட எம்ஆர்டியில் வேகமாகச் சென்றுவிடலாம். போக்குவரத்தும் இல்லை, நெரிச லும் இல்லை,” என்றார் அவர்.

கேன்பரா நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங் கின.  

புதிய கேன்பரா நிலையம் அருகே தாண்டிச் செல்லும் ஒரு தடத்தை அமைக்க ஏதுவாக அட்மிரல்டி நிலையம் முதல் யோ சூ காங் நிலையம் வரை ஐந்து எம்ஆர்டி நிலையங்கள் இந்த விசாக தின விடுமுறையின்போது மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 72 மீட்டர் நீளம் உடைய இந்தத் தடம் செம்பவாங் நிலையத்திற்கும் புதிய கேன்பரா நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

வடக்கு, தெற்கு ரயில் பாதை யில் ஏதேனும் கோளாறு ஏற்பட் டால் ரயில்கள் தடம் மாற இந்தத் தடம் உதவும் என்று கூறப்பட்டது.

இவ்வாறு தாண்டிச் செல்லும் தடங்கள் வடக்கு, தெற்கு பாதை யிலும் கிழக்கு, மேற்கு பாதை யிலும் 50க்கும் மேல் உள்ளன.

தடத்தை அமைப்பதற்காக விடுமுறையின் மூன்று நாட் களுக்கு நடைபெற்ற கட்டுமானப் பணியில் கிட்டத்தட்ட 110 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இன்று காலை பயணிகளுக்கான ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்