ஜுவல் வளாகத்தில் பயண அனுமதியை முன்னதாகவே பெற வசதி: நாள்தோறும் 600 பயணிகள் பயன்படுத்தினர்

ஜுவல் வளாகத்தில் பயண அனுமதியை முன்னதாகவே பெற வசதி: நாள்தோறும் 600 பயணிகள் பயன்படுத்தினர்

1 mins read
ffeb9df7-52f9-4bc9-a225-8fbbb21bb9d8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  -

சாங்கி விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜுவல் வளாகத்தில் விமான பயணத்தை முன்னதாகவே உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முகப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஜுவல் வளாகம் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. இந்தக் காலகட்டத்தில் அந்த வசதிகளை நாள்தோறும் சராசரியாக சுமார் 600 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இப்போது 20 விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்குகின்றன.

வரும் ஜூலை முதல் மேலும் ஆறு நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்கும்.

அப்போது சாங்கி விமான நிலையம் வழியாகப் புறப்பட்டுச் செல்லும் விமானச் சேவைகளில் சுமார் 70% சேவைகள் இந்த வசதியை அனுபவிக்கும் என்று சாங்கி குழுமம் தெரிவித்துள்ளது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்