புதுப்பிக்கப்பட்ட ஃபூனான் கடைத்தொகுதியில் உள்ளரங்கு சைக்கிளோட்ட பாதை

புதுப்பிக்கப்பட்ட ஃபூனான் கடைத் தொகுதி இவ்வாண்டு ஜூன் மாதம் திறக்கப்படும். கடைத் தொகுதிக்குள் இருக்கும் 200 மீட்டர் உள்ளரங்கு சைக்கிளோட்ட பாதையில் வருகையாளர்கள் இனி சைக்கிள் அல்லது தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்தலாம். பாதையில் வாடிக்கை யாளர்கள் செல்லும்போது அவர்கள் நடமாடும் பகுதி தானாக ஒளிரும் புதிய அம்சம் இதற்கு மேலும் சுவாரஸ்யத்தைச் சேர்க்கிறது.

இதற்காக அசைவுகளைக் கண்டுபிடிக்கும் கேமரா கடைத் தொகுதியின் உட்கூரையில் பொருத்தப்படும். நார்த் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள சைக்கிள் பாதையின் நீட்டிப்பாக இந்த உள்ளரங்கு சைக்கிளோட்ட பாதை அமைந்து உள்ளது. கார்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ள ரங்கு சைக்கிள் பாதை அமைவதாகக் கடைத்தொகுதியின் உரிமையாளரான ‘கேப்பிட்டலேண்ட்’ நிறுவனத்தின் சில்லறை விற்பனைப் பிரிவின் தலைமை நிர்வாகி திரு கிரிஸ் சோங் தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் செல்லாதவர் தங் களது பாதுகாப்பு குறித்து கவலை அடைய வேண்டியதில்லை என்றது அந்நிறுவனம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்