உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் மலேசிய மாது மரணம்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த பேருந்து விபத்தில் மலேசிய மாது ஒருவர் மாண்டார். இரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்ட போலிஸ் 61 வயதான மாது சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவித்தனர்.

27 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவி வரு வதாகவும் போலிஸ் கூறியது. பேருந்து மலேசியாவைச் சேர்ந் தது என்றும் விபத்து நிகழ்ந்தபோது சோதனைச் சாவடியில் போக்குவரத்து வழக்கம்போல இருந்தது என்றும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ அறிகிறது.

கிளம்பிச் சென்ற பேருந்தைத் துரத்தி ஓடிய மாது அதனைப் பிடித்துத் தொற்ற முயன்றபோது கீழே விழுந்த தையும் அவர் மீது பேருந்து ஏறியயதையும் தாம் கண்டதாக மிங் ஷ்யான் என்பவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள் ளார். இதற்கிடையே, அந்த மாதின் பெயர் திருவாட்டி யோங் கோங் ஃபோங் என்றும் சிங்கப்பூரில் ஓர் உணவகத்தில் பணியாற்றி வந்த அவர் ஜோகூரில் உள்ள தமது வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது விபத்து நிகழ்ந்ததாக ‘வான்பாவ்’  சீன நாளிதழ் கூறியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon