சிங்கப்பூர்-மலேசியா ரயில் திட்டம் ஒத்திவைப்பு

ஜோகூர் பாரு, உட்லண்ட்ஸ் பெருவிரைவு ரயில் இணைப்புக் கான (ஆர்டிஎஸ்) கட்டுமானப் பணிகளை செப்டம்பர் 30ஆம் தேதிவரை தள்ளிவைக்க சிங்கப்பூரும் மலேசியாவும் இணக்கம் கண்டுள்ளன.

சிங்கப்பூருக்கும் மலேசியா வுக்கும் இடையிலான பெரு விரைவு ரயில் இணைப்புக்கான கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை தள்ளிவைக்கப்படும். இதன் தொடர்பில் நேற்று போக் குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் மலேசியாவின் போக்கு வரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் சந்தித்து ஒத்திவைப் புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அத்துடன் ஒப்பந்தப்படி ஆறு மாதக்காலத்திற்குக் கட் டுமான வேலைகளைத் தள்ளி வைப்பதால் ஏற்படும் $600,000க்கும் மேற்பட்ட இழப் பீட்டை மலேசியா சிங்கப்பூருக் குத் தரவேண்டும்.

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு அமைந்துள்ள 'பிஎஸ்ஏ' கட்டடத்தில் இரு அமைச்சர்களும் இந்த ஒப்பந் தத்தின்வழி அதிகாரபூர்வமாக இணக்கம் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு கோ, இத்தற்காலிக ரத்தை அடுத்து ஆர்டிஎஸ் திட்டம் தொடரவேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கூறி னார். கடந்தாண்டு செய்யப்பட்ட இருதரப்பு இணக்கத்தின்கீழ் குறிப்பிட்டிருந்ததுபடியும் இத்திட் டம் தொடரலாம் அல்லது திட்டத் தின் நோக்கத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடனும் அமையலாம் என்றார்.

"இல்லையென்றால் ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டம் மலேசியாவால் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும். இதுநாள்வரை ஆர்டிஎஸ் இணைப் புக்கான நிபந்தனைகளை சிங்கப்பூர் நிறைவேற்றி வந்ததில் ஏற்பட்ட செலவுகளை மலேசியா சிங்கப்பூருக்குத் திரும்பத் தந்து விடவேண்டும்," என்றார் அமைச் சர் கோ.

இதன்படி திட்டத்தைக் கைவிட மலேசியா முடிவெடுத்தால் $66 மில்லியனுக்கு மேல் அது செலுத்த நேரிடும்.

திட்டத்தை ரத்து செய்யும் முடிவு, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்பந்ததாரர்கள், ஏலம் எடுத்தோர் ஆகியோரையும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தையும் பாதிக்கும்.

ஒவ்வொரு நாளும் ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 300,000 பேர் பயணம் செய்து வரும் நிலையில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் குறைப்பதற்கான அவசியத்தை இரு அமைச்சர்களும் உணர்ந் திருப்பதாகக் கூட்டு அறிக் கையில் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் நீளமுடைய ஆர்டிஎஸ் இணைப்பு, சிங்கப்பூரின் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி பாதையையும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகாரையும் இணைக்கும். திட்டத்தின்படி ரயில் சேவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று தொடங்குவதாக இருந் தது.

ஆனால் கட்டுமானப் பணிகள் இப்போது தள்ளி வைக்கப்படுவதால் சேவை தொடங்கும் தேதியும் பின்னுக் குத் தள்ளப்படலாம் என்று திரு கோ தெரிவித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பைக் கருதி திட்டத்தைத் தற்காலிக மாக ரத்து செய்ய சிங்கப்பூர் முடிவெடுத்துள்ளது என்று கூறிய திரு கோ, இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!