சுடச் சுடச் செய்திகள்

முழுவீச்சில் மசெகவின் வேட்பாளர் வேட்டை 

அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தேடும் பணியை ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக) முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் 200ஆக இருந்த அதன் உத்தேச வேட்பாளர் எண்ணிக்கை படிப்படியாகப் பரிசீலிக்கப்பட்டு இப்போது சுமார் 50ஆகக் குறைந்து வந்துள்ளது என்று அறி யப்படுகிறது.

மசெகவின் நான்காம் தலை முறைத் தலைவர்கள் குழுவின் தலைவரான துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அண்மையில் ஒரு பேட்டியில், பொதுத் தேர்தலுக் கான அறிக்கையை மசெக இப் போது வகுத்து வருகிறது என்றும் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேடும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரி வித்திருந்தார்.

அடுத்த பொதுத் தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் துக்குள் நடைபெற வேண்டும்.

உத்தேச வேட்பாளர்கள் என்று கருதப்படுவோர் அடித்தள அமைப் புகளிலும் மசெக கிளைகளிலும் தொண்டூழியம் புரிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். 

1997 பொதுத் தேர்தலில் வேட்  பாளராகக் களம் இறக்கப்பட்ட ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லில்லி நியோ, “இவ்வாறு தொண் டூழியம் புரிவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி யவை பற்றி அவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

“குடியிருப்பாளர்களின் தேவை என்ன, அவற்றுக்குத் தீர்வு காண முடியுமா, ஒவ்வொரு வாரமும் சளைக்காமல் அவர்களைச் சந் திக்க முடியுமா போன்றவற்றை உத்தேச வேட்பாளர்கள் இந்தத் தொண்டூழியத்தின் மூலம்தான் அறிந்துகொள்ள முடியும்,” என் றார். 

“அடித்தளத் தொண்டூழியர் ஒருவர் தமது அடித்தள ஆலோச கர் எவ்வாறு தமது தொகுதிவாசி களைச் சந்திக்கிறார், அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிகிறார், அவர்களுக்கு இடையிலான பிணைப்பை எவ்வாறு வலுவாக்கிக் கொள்கிறார்கள் போன்ற அம்சங் களைக் கற்றுக்கொள்கிறார்,” என்றார் 2015 பொதுத் தேர்தலில் வேட்பாளராக அறிமுகமாவதற்கு முன் தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் குமாரி இந்திராணி ராஜாவுடன் அடித்தளப் பணிகளில் ஈடுபட்ட அதே தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா.

தொடக்கக் கட்டத்தில் உத்தேச வேட்பாளர்கள் அமைச்சர் ஒருவ ரையும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிலரையும் தேநீர் விருந் தில் சந்திப்பார்கள்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon