அங் மோ கியோவில் திறக்கப்படாத அஞ்சல்களையும் பொட்டலங் களையும் குப்பைத் தொட்டியில் வீசிய அஞ்சல்காரர் ஒருவர், இவ்வாண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இச்சம்பவம் குறித்து நடத்தப் பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த அஞ்சல் காரருக்கு சிறப்புத் தேவைகள் இருப்பதாக ஆணையம் கண்ட றிந்தது.
அதே வேளையில், இந்தச் சம்பவத்தில் அஞ்சல் விநியோக முறைக்கு பங்கம் விளைவிக்கப் பட்டதால் சிங்போஸ்ட் நிறுவனத் திற்கு தான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
குப்பைத் தொட்டியில் கிடந்த அஞ்சல்களைப் படமெடுத்து பயனீட்டாளர் ஒருவர் அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தையடுத்து, அங் மோ கியோவில் உள்ள 17 வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்கு அஞ்சல் களை விநியோகம் செய்த அந்த 29 வயது அஞ்சல்காரர் ஜனவரி 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிங்போஸ்ட், போலிசிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சேர்த் தது. அஞ்சல் சேவைகள் சட்டத்தை அவர் மீறியது விசா ரணையில் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட அந்த அஞ்சல் காரர் தமது செயல்களுக்கு வருந் தியதாகவும் விசாரணைக் குழு வுக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் ஆணையம் நேற்று தெரிவித்தது.
சூழ்நிலை கருதி, அவருக்கு அறிவுரை வழங்க ஆணையம் முடிவெடுத்தது.
மனிதவள நடைமுறைகளில் ஊழியர்களை ஈடுபடுத்தும் முயற் சிகளைத் தொடர்ந்து மேம்படுத்த சிங்போஸ்ட் நிறுவனம் கடப்பாடு கொண்டிருப்பதைத் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் சுட்டியது.

