கள்ளக் குடியேறிகளுக்கு அடைக்கலம்: பங்ளாதேஷ் ஆடவருக்கு எட்டு மாதச் சிறை

கள்ளக் குடியேறிகளுக்கு அடைக்கலம்: பங்ளாதேஷ் ஆடவருக்கு எட்டு மாதச் சிறை

2 mins read

இலங்கையைச் சேர்ந்த இருவர் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குக் கூடுதலாக சிங்கப்பூரில் தங்கு வதற்கு அடைக்கலம் தந்த பங்ளா தேஷ் நாட்டவர் ஒருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது.

லிட்டில் இந்தியாவின் கஃப் ரோட்டில் உள்ள ஓர் இடத்தில் வாடகைக்கு தங்கியிருந்தார் மொண்டோல் ஃபாருக், 40 (படம்). அந்த இடத்தை நிர்வகித்து அங்கு வாடகைக்கு இருந்தவர்களிடம் இருந்து வாடகைப் பணத்தை வசூ லிக்கும் பொறுப்பு ஃபாருக்கிற்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், மற்றவர்களை அங்கு குடிவைக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அப்படி இருந்தும், 22 வயது மதிக்கத்தக்க இலங்கை நாட்டவர் களான சவரிமுத்து கனிஸ்தன், அகாலபோல ஷவீன் அ‌ஷின்ஷனா இருவருக்கும் அந்த இடத்தில் தங்குவதற்கு ஃபாருக் அடைக் கலம் தந்தார்.

அப்போது அந்த இருவரும் எந்தவொரு அடையாள ஆவணங் களையும் ஃபாருக்கிடம் காட்ட வில்லை. அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு சிங்கப்பூரில் தங்கியிருக் கிறார்களா என்பதையும் ஃபாருக் சரிபார்க்கவில்லை.

இவ்வாண்டு மார்ச் 13ஆம் தேதி, குடிநுழைவுச் சோதனைச் சாவடியின் அதிகாரிகள் அந்த இடத்தில் சோதனை நடத்தினர்.

சமூக வருகை அனுமதி காலா வதியாகி கனிஸ்தனும் அ‌ஷின் ஷனாவும் முறையே 33 நாட்கள், ஆறு நாட்கள் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களுக்கு கடந்த மார்ச் 14ஆம் தேதி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கனிஸ்தனுக்கு விதிக்கப்பட்ட $2,500 அபரா தத்தை அவரால் செலுத்த முடியா ததால் அவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அ‌ஷின்ஷனாவிற்கு விதிக்கப்பட்ட $500 அபராதத்தை அவரால் செலுத்த முடியாததால் அவருக்கு இரண்டு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டவர்களிடம் வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்னர், அவர்களின் குடிநுழைவு ஆவ ணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் அறிவுறுத் தியது.

சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குக் கூடுதலாக சட்ட விரோதமாகத் தங்குவோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ அடைக் கலம் தருவோருக்கு அதிகபட்ச மாக 12 மாதச் சிறைத் தண்ட னையும் $6,000 அபராதமும் விதிக்கப்படலாம்.