சுடச் சுடச் செய்திகள்

உலகப் பொருளியல் கருத்தரங்கின் நிர்வாக சபையில் மூத்த அமைச்சர் தர்மன்

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் உலகப் பொருளியல் கருத்தரங்கின் நிர்வாக சபையில் சேர்ந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுத்துறையில் பல்லாண்டுகளாகப் பணியாற்றிய திரு தர்மன், அந்த அமைப்புக்கு அரிய நுண்ணோக்கையும் அரசாங்க நிர்வாகம் தொடர்பான அனுபவ அறிவையும் சேர்ப்பதாக சுவிட்சர்லாந்தில் தளம் கொண்டுள்ள அவ்வமைப்பு கூறுகிறது.1971ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகப் பொருளியல் கருத்தரங்கு பல்வேறு அரசியல் தலைவர்களையும் பெரு வணிகர்களையும் இணைத்து வட்டார அளவிலும் உலக அளவிலுமான குறிக்கோள்களை நிர்ணயிக்கிறது.

அறங்காவலர் சபையின் 25 உறுப்பினர்களில் ஒருவராகத் திரு தர்மன் இருப்பார். இதே சபையில் அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோர், அலிபாபாவின் நிறுவனர் ஜேக் மா ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon