6,700க்கும் அதிகமான வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது வீவக

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இவ்வாண்டுக்கான இரண்டாவது விற்பனை நடவடிக்கையில் 6,753 வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. தெங்கா, காலாங் வாம்போ ஆகிய வட்டாரங்களில் கட்டப்படும் புதிய வீடுகளும் இதில் உள்ளடங்கும். இந்த விற்பனை நடவடிக்கையிலிருந்து, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளுக்கான ('பிடிஓ' வீடுகள்) குலுக்கலின் முடிவுகளை ஆறு வாரங்களுக்குப் பதிலாக மூன்று வாரங்களில் தெரிந்துகொள்ளலாம்.

பொது வாடகை வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்கள் 'பிடிஓ' வீட்டை முன்பு வாங்கியிருந்தால் முதிர்ச்சி அடையாத வட்டாரங்களில் இரண்டு அறை 'ஃப்லெக்சி' வீடு அல்லது மூன்று அறை வீடு வாங்க விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு 15,000 வெள்ளி மானியம் கொடுக்கப்படும்.

இம்முறை மொத்தம் 3,485 'பிடிஓ' வீடுகள் விற்பனைக்கு விடப்படுகின்றன. வீட்டு விலைகள், உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் இரண்டு அறை 'ஃப்லெக்சி' வீட்டுக்கு 86,000 வெள்ளி முதல் தொடங்குகின்றன. காலாங் வாம்போவிலுள்ள நான்கு அறை வீடுகளுக்கான விலைகள் 526,000 வெள்ளி முதல் தொடங்குகின்றன. இந்த விலைகளில் மானியங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. கடந்த விற்பனை நடவடிக்கையில் எஞ்சியுள்ள 3,268 வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், 'பிடிஓ' திட்டங்களை மூன்று மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பதற்குப் பதிலாக ஆறு மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்கும் என அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் திட்டமிட உதவுவதற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!