ஹெங்: மக்களை இணைத்து ஈடுபடுத்துவது பெரும் சவால்

ஹெங்: மக்களை இணைத்து ஈடுபடுத்துவது பெரும் சவால்

1 mins read
8a3f2832-cc61-477f-b0f2-008df0842650
-

தற்போதுள்ள விவகாரங்களைச் சமாளித்துக்கொண்டே நீண்டகாலத்தைப் பற்றியும் சிங்கப்பூர் நினைக்கவேண்டும் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். இதனைச் செய்வதற்கு சிங்கப்பூர், சுதந்திரம் அடைந்தது முதல் கட்டிக்காத்துவரும் சமூக இணக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவேண்டும் என்று திரு ஹெங் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சிங்கப்பூரின் குறுகியகால மற்றும் நீண்டகாலச் சவால்கள் என்ன என்பது குறித்து சமூகத்தில் இணக்கம் நிலவுவதாக அவர் விவரித்தார். திரு ஹெங் சீனாவுக்கு ஒரு வார பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சவால்கள் என்ன என்பது குறித்து நல்ல கருத்திணக்கம் நிலவுவதே சிங்கப்பூர் செழித்ததற்கு முக்கிய காரணம் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். இந்த இணக்கத்தைத் தக்கவைப்பதையும் பிரச்சினைகளை ஒன்றாகத் தீர்ப்பதில் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்துவதையும் தமது பணியின் ஆகப் பெரிய சவாலாகக் கருதுவதாகத் திரு ஹெங் கூறினார்.