தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்1 சேவை பாதிப்பு

1 mins read
d4cb1c3e-7894-4d6b-a892-7bb8fd95f143
-

எம்1 நிறுவனத்தின் நுண்ணிழைக் கம்பிவட சேவையில் புதன்கிழமை பழுது ஏற்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தச் சேவைத் தடையால் ஆயிரக்கணக்கான இணைய பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 ஆகியவற்றின் இணையச் சேவைகளில் தடங்கல் ஏற்பட்ட மறுநாள் சேவை மீண்டும் தடைப்பட்டது. சிங்கப்பூரின் நுண்ணிழைக் கட்டமைப்பின் உரிமையளரான 'நெட்லிங்க் டிரஸ்ட்' நிறுவனத்தின் நுண்ணிழைக் கம்பிவடம் துண்டித்தது இதற்குக் காரணம். புதன்கிழமை ஏற்பட்ட சேவைத் தடையால் சிங்கப்பூரின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள வாடிக் கையாளர்கள் பாதிக் கப்பட்டனர். காலையில் எம்1 நிறுவனம் பாதிப்பைப் பற்றித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தது. நின்றுபோன சேவைகளை மீண்டும் இயக்க பொறியாளர்கள் முயன்றுவருவதாக அந்நிறுவனம் கூறியது. பிரச்சினை எதனால் ஏற்பட்டது என்பதை எம்1 அப்போது சொல்லவில்லை.

காலை 9 மணி நிலவரப்படி 2,400 பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'டவுன்டிடெக்டர்.எஸ்ஜி' இணையத்தளம் தெரிவித்தது.