பராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு

பராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு

1 mins read
4ac7ab21-1fed-40fc-8021-ecda294b6365
-

புவாங்கோக்கிலுள்ள பராமரிப்பு இல்ல வளாகத்தில் அசுத்தமான உணவைச் சாப்பிட்ட 59 பேர் நோய்வாய்ப்பட்ட சம்பவத்தை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திங்கட்கிழமை நிலவரப்படி அங்சானா இல்லத்தில் 22 இரைப்பை குடல் அழற்சி சம்பவங்களும் பான்யன் இல்லத்தில் 37 சம்பவங்களும் பதிவானதாகச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் தெரிவித்துள்ளன. மே 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட அனைவரிடத்திலும் இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டன. பாதிக்கப் பட்டவர்களில் 11 பேர் மருத்து வமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் மூவர் வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.