உலகப் பொருளியல் கருத்தரங்கின் நிர்வாக சபையில் அமைச்சர் தர்மன்

உலகப் பொருளியல் கருத்தரங்கின் நிர்வாக சபையில் அமைச்சர் தர்மன்

1 mins read

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் உலகப் பொருளியல் கருத்தரங்கின் நிர்வாக சபையில் சேர்ந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுத்துறையில் பல்லாண்டுகளாகப் பணியாற்றிய திரு தர்மன், அந்த அமைப்புக்கு அரிய நுண்ணோக்கையும் அரசாங்க நிர்வாகம் தொடர்பான அனுபவ அறிவையும் வழங்குவதாக சுவிட்சர்லாந்தில் தளம் கொண்டுள்ள அவ்வமைப்பு கூறுகிறது. 1971ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகப் பொருளியல் கருத்தரங்கு பல்வேறு அரசியல் தலைவர்களையும் பெரு வணிகர்களையும் இணைத்து வட்டார அளவிலும் உலக அளவிலும் குறிக்கோள்களை நிர்ணயிக்கிறது.

அறங்காவலர் சபையின் 25 உறுப்பினர்களில் ஒருவராக திரு தர்மன் இருப்பார். இதே சபையில் அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோர், அலிபாபாவின் நிறுவனர் ஜேக் மா ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.