25,000 புகையிலை பொட்டலங்களைக் கொண்டு வந்த மூவருக்குச் சிறை 

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் 25,000க்கும் அதிகமான புகையிலைப் பொட்டலங்களைக் கடத் தியதற்காக மூவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது. புகையிலையை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்காக ஆட்களைச் சேர்த்ததன் தொடர்பில் மலேசியரான 30 வயது சரவண குமார் லட்சுமணனுக்கு ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

புகையிலையை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்ததற்காக 23 வயது தர்மேந்திரன் மகேந்திரனுக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனையும் 33 வயது காளிதாஸ் பாலகிருஷ்ணனுக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டில் ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 25,659 பொட்டலங்கள் அதிகாரிகளிடம் சிக்கின.