எதிர்காலத்தில் வீடுகளுக்கான கழிவறைகள் விரைவாகவும் மலிவாகவும் முப்பரிமாண முறையில் அச்சிடப்படலாம். முப்பரிமாண அச்சில் கழிவறைகளை உலகிலேயே முதன்முதலாகத் தாங்கள் உருவாக்கியுள்ளதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
முப்பரிமாண அச்சு வேலையைச் செய்யும் இயந்திரம், கழிவறையை உருவாக்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரமே எடுக்கிறது. பொதுவாக இதுபோன்ற கழிவறைகளைத் தயாரிக்க $6,000லிருந்து $7,000 ஆகும். ஆனால் முப்பரிமாண அச்சில் உருவாக்கப்படும் கழிவறைக்கு அதில் பாதிச் செலவுதான் ஆகும் என்று ஆய்வுக் குழுவினர் கூறினர். 2014ஆம் ஆண்டிலிருந்து வீவக வீடுகளுக்கும் சில கொன்டோமினியங்களுக்கும் கழிவறைகள் தொழிற்சாலைகளில் முன்னதாகவே தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படுகின்றன. இப்புது முயற்சியால் பொருத்துவதற்கான நேரமும் மிச்சப்படும்.

