ஆய்வு: முதியோருக்கு மாதம் $1,379 தேவை

ஒரு மாதத்திற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவருக்கு $1,379 தேவைப்படுவதாக பொதுக் கொள்கைக்கான லீ குவான் இயூ பள்ளியைச் சேர்ந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

தனியாக வசிக்கும் முதியவர் ஒருவரின் அடிப்படை வீட்டுச் செலவு $1,379 என்றும் வயது முதிர்ந்த தம்பதியின் வீட்டுச் செலவு $2,351 என்றும் நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறின.

அத்துடன் 55க்கும் 64 வயதுக் கும் இடைப்பட்ட வயதுடைய முதியவரின் அடிப்படை வீட்டுச் செலவு $1,721 என்றும் கூறப் பட்டது. 

பல்வேறு குடும்பப் பின்னணி களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட் டோர் பங்கேற்ற குழுக் கலந் துரையாடல்கள் மூலம் இந்தத் தொகை கணக்கிடப்பட்டது.

இதற்கிடையே மத்திய சேம நிதித் திட்டத்தில் இணைந்துள்ள முதியவர் ஒருவருக்கு அடிப்படை ஓய்வூதிய வழங்குதொகை $800க் கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்று ஆய்வு கூறியது. 

அவருக்கு ஏற்படக்கூடிய அடிப் படை வீட்டுச் செலவுக்கும் குறைவான தொகையாக இது உள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon