சுடச் சுடச் செய்திகள்

சிறார் பாலியல் குற்றங்கள் புரிந்தவர்மீது குற்றச்சாட்டு   

குறைந்தது 47 இளஞ்சிறார் களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதன் தொடர்பில் 52 வயதான ஆஸ்திரேலியர் போரிஸ் குன்சவிட்ஸ்கி மீது குற்றம் சாட் டப்பட்டுள்ளது. 

சிறாருடன் உடலுறவு கொண் டதன் தொடர்பில் 25 குற்றச் சாட்டுகள், இரு சிறார்களை உடலுறவு கொள்ளச் செய்ததன் தொடர்பில் 12 குற்றச்சாட்டுகள் ஆகியவை உட்பட நேற்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை போரிஸ் ஒப்புக்கொண்டான். 

ரஷ்யாவில் பிறந்த போரிஸ் ஆஸ்திரேலியாவுக்கு தன் 12வது வயதில் சென்றுவிட் டான். 

பின்னர் 2000க்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத் தில் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது போரிஸ் இந்தப் பாலியல் குற்றங்களைப் புரிந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலருக்கு அப்போது குறைந்த பட்சம் பத்து வயதாக இருந்த தாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

சிங்கப்பூர் உட்பட தென்கிழக் காசிய நாடுகளுக்குப் பயணம் சென்று சிறார்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதுடன் அச் செயல்களைப் புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றிலும் பதிவு செய்ததாகக் கூறப்பட்டது.

இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெரும்பாலோர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழைச் சிறுவர்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon