கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுநர் மீது நடவடிக்கை

 ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ பேருந்து ஓட்டுநர் பணியின் போது கைபேசியைப் பயன் படுத்தியதற்காக நிறுவனம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளது.

பேருந்து சேவை 81ஐ ஓட்டிக்கொண்டிருந்தவர், தன்னுடைய கைபேசியைப் பயன்படுத்தியதைப் பயணி ஒருவர் காணொளியில் பதிவு செய்திருந்தார். பேருந்து நின்றுகொண்டிருந்தபோது தன் கைபேசியைப் பயன்படுத் திய ஓட்டுநர், பேருந்து நகரத் தொடங்கிய பின்னரும் தொடர்ந்து ஒரு கையால் கைபேசியை இயக்கிக்கொண் டும் மறுகையால் பேருந்தைச் செலுத்திக்கொண்டும் இருந் தார். பின்னர் கைபேசியையும் சாலையையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது காணொளியில் தெரிந்தது. இது குறைந்தது 30 வினாடி களுக்குத் தொடர்ந்தபின் தன் செயலைப் பயணி பதிவு செய்வதை ஓட்டுநர் உணர்ந் ததாகக் கூறப்பட்டது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon