3,000 கிலோ எரிவாயு எண்ணெய் திருட்டு: எழுவர் கைது

3,000 கிலோ எரிவாயு எண்ணெய் திருட்டு: எழுவர் கைது

1 mins read

கிட்டத்தட்ட 3,000 கிலோகிராம் கடல்துறை எரிபொருள் எண் ணெய் விற்பனையில் சட்டவிரோத மாக ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் எழுவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூரோங் தீவுக்கு அருகில் பெனோய் பேசினுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் செவ்வாய்க் கிழமை கடல்துறை, துறைமுக ஆணையமும் கடற்கரை காவல் படையும் இணைந்து மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக் கையில் அவர்கள் கைதானதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் கள் இருபது வயதுக்கும் நாற்பத் தெட்டு வயதுக்கும் இடைப்பட்டவர் கள் எனக் கூறப்படுகிறது.

அந்த எழுவரில் மூவர் கடல் துறை சேவை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் என்றும் மற்ற நால் வருக்கு வெளிநாட்டில் பதிவு செய் யப்பட்ட படகு ஒன்றின் பணியாளர் கள் என்றும் கூறப்படுகிறது.

கடல்துறை நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது நிறுவனத் திற்குத் தெரியாமல் எரிபொருள் எண்ணெய்யைத் திருடி அதனை விற்க முயன்றதாக நம்பப்படுகிறது.

நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் மீது நம்பிக்கை மோசடி தொடர் பான குற்றம் சுமத்தப்பட்டது.