தெங்கா, காலாங் வாம்போவில் அமையும் புதிய வீடுகளுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மொத்தம் 6,753 வீடுகளை நேற்று விற்பனைக்கு விட்டுள்ளது.
இந்த விற்பனை நடவடிக்கையில் இருந்து, தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகளை வாங்க விண்ணப்பிப்போர், தங்க ளது விண்ணப்பங்கள் ஏற்கப்பட் டதா இல்லையா என்பதை இனி மூன்று வாரங்களில் தெரிந்துகொள் ளலாம். முன்னதாக, இந்தக் கால அவகாசம் ஆறு வாரங்களாக இருந்தது.
முன்னர் பிடிஓ வீடு வாங்கி, தற்போது பொது வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்கள், முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டை களில் ஈரறை ஃபிளெக்சி அல்லது மூவறை வீடுகளை வாங்க விண் ணப்பிக்கும் பட்சத்தில் $15,000 மானியம் பெற இயலும்.
இவ்வாண்டின் இரண்டாவது வீவக வீட்டு நடவடிக்கை இது. இதில் மூன்று நகரங்களில் மேற் கொள்ளப்படும் நான்கு வீடமைப்புத் திட்டங்களில் 3,485 பிடிஓ வீடுகள் அமைகின்றன. வீட்டு விலைகள் $86,000லிருந்து $562,000 வரை எனத் தெரிவிக்கப்பட்டது.