250,000 வெள்ளி போதைப்பொருள் பறிமுதல்

250,000 வெள்ளி போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
a314f556-277c-4eda-afb6-35c468af754a
-

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் எட்டுப் பேரைக் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையில் கிட்டத்தட்ட 2.8 கிலோகிராம் போதைமிகு அபின், 591 கிராம் 'ஐஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களில் எழுவர் சிங்கப்பூரர்களாகவும் ஒருவர் நாடற்றவராகவும் உள்ளனர்.

புதன்கிழமை (மே 22ஆம் தேதி) சை சீ ரோட்டில் கண்காணித்த அதிகாரிகள் அங்கிருந்து சந்தேக நபர்களைப் பின்தொடர்ந்து அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் சோதனை நடத்தினர். இது குறித்த விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.