கட்டுமான இடங்களிலிருந்து வெளியாகும் கழிவுநீரை ஒழுங் காக, முறையாக கையாளுவதற்குத் தேவையான போதிய நடவடிக்கை களை எடுக்காததற்காக இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
'சை ஜூ கன்ஸ்ட்ரக்ஷன்' மற் றும் 'தி பில்டர்ஸ்' (ஹுப் ஹூவாட்) ஆகிய அந்நிறுவனங்களுக்கு நிலக் கட்டுப்பாட்டு நடவடிக்கை விதிமுறைகளை மீறியதற்காக முறையே, $30,300 மற்றும் $14,400 அபராதம் விதிக்கப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற் றுத் தெரிவித்தது.
குற்றச்செயல்கள், சென்ற ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை இடம்பெற்றதாகவும் பொது மக்கள் அளித்த தகவல்கள், பொதுப் பயனீட்டுக் கழகத்தின் வழக்கமான சோதனைகள் காரண மாக குற்றச்செயல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
பொதுப் பயனீட்டுக் கழகம் பிறப்பித்த அனுமதி சான்றிதழ் களில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த நிறுவனங்கள் நடக்கவில்லை என்பதால் அப ராதம் விதிக்கப்பட்டது.

