உட்லண்ட்ஸ் டிரைவ் 42ல் உள்ள 604வது புளோக்கில் சிலர் ஓர் ஆடவரைத் தாக்கியதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து போலிஸ் அங்கு விரைந்தது. 27 வயது நபர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இம்மாதம் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 12.08 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் போலிஸ் 17 முதல் 27 வயதுள்ள ஏழு பேரை கைதுசெய்துள்ளது.
கலவரத்தில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடப்பதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.

