எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவை எண் 222 பேருந்து, பிடோக் நார்த் ரோட்டில் உள்ள 85 ஃபெங்ஷான் சென்டர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் விபத்தைத் தவிர்ப் பதற்காக திடீரென்று நிறுத்தப் பட்டதால் அந்தப் பேருந்தில் இருந்த முதியவர் ஒருவர் காயம் அடைந்தார். அந்த 84 வயது பயணிக்கு ஸ்டீவன் என்பவரும் அவரின் புதல்வர் திலோன் என்பவரும் உதவினர். தன் தந்தைக்குச் சரியான நேரத்தில் முதலுதவி செய்த ஸ்டீவனுக்கும் அவருடைய புதல்வருக்கும் திரு வின்சென்ட் ஸ்டோம்ப் சமூகத் தளத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
காயம் அடைந்தவருக்கு தந்தை, மகன் உதவி
1 mins read
காயம் அடைந்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து பயணியான 84 வயது முதியவருக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் உதவுகிறார். ஸ்டீவனும் அவருடைய மகனும் அந்த முதியவருக்கு முதலுதவி செய்து பாராட்டுப் பெற்றனர். படம்: ஸ்டோம்ப் -

