$250,000 போதைப்பொருள் சிக்கியது: எட்டு பேர் கைது

$250,000 போதைப்பொருள் சிக்கியது: எட்டு பேர் கைது

1 mins read

மத்திய போதைப்பொருள் ஒழிப் புப் பிரிவு ( சிஎன்பி) அதிகாரிகள், போதைப் பொருள் சந்தேகப்பேர் வழிகள் எட்டு பேரைக் கைது செய்து இருக்கிறார்கள்.

ஹெராயின், ஐஸ் உள்ளிட்ட $250,000 மதிப்புள்ள போதைப் பொருட்களும் பிடிபட்டன.

இந்தப் பிரிவு அறிக்கை ஒன் றில் நேற்று இதனை தெரிவித்தது. கைதானவர்கள் 36 முதல் 61 வயது வரை உள்ளவர்கள்.

சாய் சீ ரோடு, தெம்பனிஸ் அவென்யூ 10 போன்ற இடங் களில் சோதனைகள் நடந்தன.

பிடிபட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக சிஎன்பி தெரிவித்துள்ளது.

அவர்களில் ஏழு பேர் சிங்கப் பூரர்கள், ஒருவர் நாடற்ற பிரஜை. மொத்தத்தில் ஏறக்குறைய 2.8 கிலோ ஹெராயின், 519 கிராம் ஐஸ் ஆகியவை புதன்கிழமை பிடிபட்டன.

முதலில் சாய் சீ ரோட்டில் மூன்று பேரைக் கண்ட அதிகாரி கள் ஒருவரை கைது செய்தனர். பிறகு இதர மூன்று சந்தேகப் பேர்வழிகள் பிடிபட்டனர். சாய் சீ ரோட்டில் காணப்பட்ட மற்ற இருவர் ஒரு காரில் சிக்கினர்.

காரும் பறிமுதல் செய்யப்பட் டது. பிறகு அதிகாரிகள் மேலும் இருவரைக் கைதுசெய்தனர்.