குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நிறுவனங்களுக்கு அபராதம் குறையும்

குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நிறுவனங்களுக்கு அபராதம் குறையும்

1 mins read

கணினித் தகவல் தொடர்பிலான அத்துமீறல் சம்பவங்களில் தங்கள் பங்கை ஏற்றுக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அத்தகைய சட்டவிரோத காரியங்கள் பொதுவான பிரிவில் வரும் பட்சத்தில், குறைந்த அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவான அத்துமீறல்களில், யூஆர்எல்களைக் கையாளுதல், ரகசிய தகவல்களைச் சரியாக பாதுகாக்காதது அல்லது அச்சு தவறுகள் ஆகியவை உள்ளடங்கும்.

பிரத்தியேக கணினித் தகவல் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

எல்லாவற்றையும் நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்து சிறந்த முறையில் செயல்பட்டுவரும் நிறுவனங்கள் கூட கணினித் தகவல் அத்துமீறல்களைச் சுத்தமாக துடைத்து ஒழிக்க முடியாது என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.