சிங்கப்பூர் தேசிய பல்ககைக்கழகக் கட்டடம் ஒன்றில், 2016 செப்டம்பர் 14 ஆம் தேதி கூரைத் தகடுகள் பொருத்தும் பணி நடந்துகொண்டு இருந்தபோது மியா ஜோபாயத் என்ற ஊழியர் நின்றிருந்த தகடு நழுவிவிட்டது. அவர் ஐந்தரை மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார், முதுகுத் தண்டில் அடிபட்டதால் மியா ஆயுள் வரை சக்கர நாற்காலி யில் காலம் தள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
இதன் காரணமாக, அந்த ஊழியரின் கண்காணிப் பாளராக இருந்த சர்க்கார் மிதுன் என்பவருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் அவர் பணியாற்றிய 'அவா குளோபல்' என்ற நிறுவனத்துக்கு $210,000 அபராதமும் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது.

