கிராப் நிறுவனம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, வோங் சியூ வாய், 54, என்ற தனது ஓட்டுநரின் சேமிப்புக் கணக்கிற்கு $33,600 தொகையைத் தவறுதலாக மாற்றிவிட்டது. அந்தத் தொகையை அந்த ஓட்டுநர் தவறாகக் கையாண்டுவிட்டார். இதற்காக வோங்கிற்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பணத்தைத் தவறாகக் கையாண்டதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட வோங்குக்கு மே 27ஆம் தேதியிலிருந்து தண்டனையைத் தொடங்க அனுமதி கிடைத்தது.

