மூலாதார பணவீக்கம் குறைவு

மூலாதார பணவீக்கம் குறைவு

1 mins read

சிங்கப்பூரில் மூலாதார பணவீக்கம் ஏப்ரல் மாதம் மீண்டும் குறைந்தது. அந்த மாதத்தில் சேவைத்துறை பணவீக்கம் அதிகரித்தது என்றாலும் அதை ஈடுசெய்யும் அளவுக்கு மின், எரிவாயு செலவும் உணவுத்துறை பணவீக்கமும் குறைவாக இருந்ததாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.

தனியார் போக்குவரத்து, குடியிருப்புச் செலவுகளை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஏப்ரலில் 1.3% குறைந்தது.-

இந்தக் குறைவு மார்ச் மாதம் 1.4% ஆகவும் பிப்ரவரி 1.4% ஆகவும் இருந்தது. ஒட்டுமொத்த பணவீக்கம் ஏப்ரலில் ஆண்டு அடிப்படையில் 0.8% கூடியது. இந்த உயர்வு மார்ச் மாதம் 0.6% ஆகவும் பிப்ரவரியில் 0.5% ஆகவும் இருந்தது. மொத்தத்தில் சிங்கப்பூரின் பணவீக்கப் போக்குகள் குறைவாகவும் நிலையாகவும் இருந்து வருகின்றன.