தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நைட் சஃபாரி விலங்கியல் தோட்டம் அதன் நுழைவுக் கட்டணத்தை $25க்குக் குறைத்துள்ளது. இம்மாதம் 25ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரை சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அனைவ ருக்கும் இச்சலுகை நீடிக்கும்.
அதன் வழக்கமான கட்டணம் பெரியவர்களுக்கு $49, சிறுவர்களுக்கு $33. இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சிறப்பு 'சஃபாரி அட்வெஞ்சர்' சுற்றுலா வருகையாளர் களை மகிழ்விக்கும். அதில் வருகையாளர்கள் ஆசிய யானைகளுக்கு உணவு தயாரித்து ஊட்டும் அரிய அனுபவத்தைப் பெறுவார்கள் என்று கூறினார் சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் தலைமை விற்பனை அதிகாரி இசபெல் செங்.

