ரயில்களிலும் பேருந்துகளிலும் நோன்புப் பெருநாள் குதூகலம்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அதன் குதூகலத்தை வெளிப்படுத் தும் விதத்தில் அலங்கரிக்கப்பட்ட ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணிகள் நேற்று முதல் ஜூலை மாதம் 3ஆம் தேதி வரை பயணம் செய்யலாம்.

நிலப் போக்குவரத்து ஆணை யம், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம் ஆர்டி நிறுவனங்கள், கெம்பாங் கான்- சாய் சீ தொகுதி, கேலாங் சிராய் தொகுதி ஆகியவை இந்தச் சிறப்பு அலங்காரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஐந்து ரயில் பாதைகளில் ஒவ் வொன்றாக ஐந்து அலங்கரிக்கப் பட்ட ரயில்களும் 28, 70, 76, 154, 197 எண் கொண்ட ஐந்து பேருந் துகளும் பவனி வரும்.

கேலாங் சிராய் நோன்புப் பெரு நாள் சந்தைக்கு அருகில் உள்ள பாய லேபார் எம்ஆர்டி நிலையத்தி லும் உள்ள அலங்காரங்கள் பார்ப் போரைப் பரவசப்படுத்தும்.

பாய லேபார் எம்ஆர்டி சந்திப்பு நிலையத்தின் இணைப்புப் பாதை, பிடோக், பூன் லே ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களிலும் இந்த அலங்காரங்கள் இருக்கும்.

பாசிர் ரிஸ் நிலையத்திலிருந்து நேற்று பாய லேபார் நிலையத்துக்குச் சென்ற நோன்புப் பெருநாள் கருப்பொருளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ரயில். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon