பொது-தனியார் துறைகளின் பங்காளித்துவத்தில் மலர்ச்சி

தொழில்நுட்ப நிறுவனங்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து முதலீடு செய்கின்றன என்றும் அரசாங்கத் துடன் பொது-தனியார் துறைகளின் பங்காளித்துவம் தொடர்ந்து செழிப்படைந்து வருகிறது என்று தொடர்பு, தகவல் மற்றும் போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

பொது-தனியார் துறைகளின் பங்காளித்துவத்தில் குளறுபடிகள் நிகழக்கூடும் என்று கூறிய டாக்டர் ஜனில், உள்ளூர் தண்ணீர் சுத் திகரிப்பு நிறுவனமான ஹைஃ பிளக்ஸ் சந்தித்த சிக்கலை மேற்கோள் காட்டினார்.

அதேவேளையில், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பற்றியும் அமைச்சர் பேசினார்.

அதில் அறிவார்ந்த தேச ஒத்துழைப்பின் அடிப்படையில், ‘கவ் டெக்’ எனும் அரசாங்கத் தொழில் நுட்ப அமைப்பின் மென்பொருள் பொறியாளர்கள், அமெரிக்க தொழில்நுட்ப ஆலோசனை நிறு வனமான ‘தோட்வொர்க்ஸ்’ உடன் இணைந்து ‘மோமன்ட்ஸ் ஆஃப் லைஃப் (ஃபேமிலி)’ செயலி உரு வாக்கத்தில் பணியாற்றினர்.

கடந்த ஜூன் மாதத்தில் வெளி யிடப்பட்ட அந்தச் செயலி, இளம் பிள்ளைகளைப் பராமரிக்கும் பெற் றோர்களுக்கும் பராமரிப்பாளர்க ளுக்கும் தேவைப்படும் சேவைக ளையும் தகவல்களையும் அளிக் கும்.

“அரசாங்கமும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து சிறந்த முறையில் பொருட்களையும் சேவைகளையும் உருவாக்குகின் றன. கடந்த காலத்தில் இதில் சிர மங்கள் இருந்தன. ஆனால், இன்றோ பொது-தனியார் துறைக ளிடையே உன்னத பங்காளித்துவம் நிலவுகிறது,” என்று அமைச்சர் ஜனில் நேற்று ‘தோட்வொர்க்ஸ்’  சிங்கப்பூர் அலுவலகத்தில் நடை பெற்ற கலந்துரையாடலில் விவரித்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon