சுடச் சுடச் செய்திகள்

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவித் திட்டம்

சிறுநீரக நோயாளிகளுக்கான “சரியாகத் தெரிந்துகொள்ளுங்கள், சரியாகத் தொடங்குங்கள்” எனும் திட்டத்தை தேசிய சிறுநீரக அறநிறுவனமும் கூ தெக் புவாட் மருத்துவமனையும் இணைந்து தொடங்கியுள்ளன. 

இதன்படி சிறுநீரக செய லிழப்புக்கு ஆளாகும் ஒருவருக்கு, மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு முந்திய மாதாந்திர விளக்கம் வழங்கப்படுவதுடன் இல்ல ஆலோசனை, ஆதரவுக் குழுக்களின் ஆதரவுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

நோய், சிகிச்சை முறை, சிறுநீரக சுத்திகரிப்பு செயல்முறை போன்றவை குறித்த போதிய அறிவு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். இதனால் நோயாளி சிகிச்சையை விரைந்து தொடங்க முடியும் என்று தேசிய சிறுநீரக அறநிறுவனம் கூறியது. 

சிகிச்சைகள் குறித்த போதிய தகவல்கள் கிடைக்கப் பெறாததால் சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதில் நோயாளிகள் எளிதில் முடி வெடுக்க முடியாமல் இருப்பதாக அறநிறுவனம் கூறியது.

தேசிய சிறுநீரக அறநிறு வனத்தின் மூன்றாவது சிறுநீரக பாதுகாப்பு மாநாட்டில் இத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

பொங்கோல் பலதுறை மருந்தகம், தோ பாயோ வெஸ்ட் சமூகநிலையம் ஆகியவற்றில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அறநிறுவனம் தொடங்கவுள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon