மூத்த குடிமக்களுக்கு வசதியான போக்குவரத்து

மூத்த குடிமக்கள் அதிகம் வாழும் சாலைகளில் வேக அளவு மணிக்கு 40 கிலோ மீட்டரி லிருந்து மணிக்கு 30 கிலோ மீட்டராக குறைக்கப்பட உள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

‘சில்வர் ஸே„ன்’ எனப்படும் முதியோர் வட்டாரத்தில் வேகக் கட்டுப்பாட்டு முன்னோட்ட சோதனை அடுத்த ஆண்டில் தொடங்கும். இது வெற்றிகரமாக இருந்தால், ஏனைய முதியோர் பகுதிகளிலும் இந்தக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படும். எங்கே முன்னோட்ட சோதனை நடை பெறும் என்பதை ஆணையம் வெளியிடவிலலை.

அதிகமாக முதியோர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை ஏற் படுத்தும் நோக்கில், முதியோர் வட்டாரம் 2014ல் அறிமுகமாக்கப் பட்டது. தற்போது தீவெங்கும் 16 முதியோர் வட்டாரங்கள் உள்ளன. மேலும் ஒன்பது இடங்கள் கட்டு மானத்தில் உள்ளன.

வரும் 2023ஆம் ஆண்டு வாக்கில் இது போல் 50 வட்டாரங்கள் இருக்கும்.

வேகத்தைக் குறைப்பது சாலை விபத்துகளைக் குறைப்பதுடன், விபத்துகள் ஏற்பட்டால் காயமடை தலையும் உயிரிழப்பையும் குறைக்க முடியும் என்று நிபு ணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

முதியோர் வட்டாரத்தில் முதியோர் தொடர்பான சாலை விபத்துகள் 75% குறைந்துள் ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

மேலும் வேகத்தைக் குறைத்து நடையர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப் படுத்தப்படும் என்றும் ஆணையம் கூறியது. ஈசூன், அங் மோ கியோ, தெம்பனிஸ் போன்ற முதிர்ச்சி யடைந்த பேட்டைகளில் இவை ஆரம்பிக்கப்படும்.

“அதிகமான மக்கள் கால் நடையாகவும் காரிலும் செல்லும் நகரத்துக்கு அருகிலுள்ள பகுதிகள், பள்ளிகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தப் படும்,” என்று 2040க்கான தனது பெருந்திட்டத்தில் ஆணையம் குறிப்பிட்டது.

மேலும், எம்ஆர்டி நிலையங்க ளுடன் குடியிருப்பாளர்கள் பகுதி களையும் ஏனைய வசதிகளையும் இணைக்கும் கூரையுடன் கூடிய 150 கிலோ மீட்டருக்கும் அதிக மான பாதைக் கட்டமைப்பும் 2040ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

ஏற்கெனவே, ‘வோக்டுரைட்’ எனும் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டில் 200 கிலோ மீட்டர் நீள கூரையுடன் கூடிய இணைப்புப் பாதைத் திட்டம் நிறைவுபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!