பொது மக்கள் பொதுப்போக்கு வரத்தைப் பயன்படுத்த வலியுறுத் தப்படும் பாதைகளில் பேருந்து தடங்களுடன் சிறப்பு சைக்கிள் பாதைகளும் இடம்பெறும்.
வரும் 2040க்குள் தீவெங்கும் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிக மான சைக்கிள் பாதைகள் இடம் பெறும்.
பேருந்து நிலையங்களும் பேரங்காடி நிலையங்களும் இணைந்த, பேருந்துகள், ரயில் களுக்கிடையே சிறந்த இணைப்பு களைக் கொண்ட, தற்போதுள்ள ஒன்பது ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மையங்களுடன் மேலும் புதிய மையங்களும் உரு வாக்கப்படவுள்ளன.
பிடாடாரி, புவாங்கொக், பொங்கோல் நார்த் ஆகிய புதிய போக்குவரத்து மையங்கள் கட்டப் பட்டு வருகின்றன. மேலும் பியூட்டி வேர்ல்ட், பிடோக் சவுத், ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட். மரினா சவுத், பாசிர் ரிஸ், தெம்பனிஸ் நார்த், தெங்கா ஆகிய இடங்களில் ஒருங்கிணைக் கப்பட்ட மையங்களைக் கட்டவும் திட்டமுள்ளது.

