சுடச் சுடச் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை மண்டலங்கள்: அரசுடன் நகர மன்றங்கள் முயற்சி

சைக்கிள்கள், மின்ஸ்கூட்டர் போன்ற உந்து நடமாட்டச் சாதனங்கள் குடியிருப்புப் பேட்டைகளுக்குள் விபத்துகள் நிகழக்கூடிய பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தடை விதிக்கும் நிலை வரக்கூடும். 

அத்தகைய நடமாட்டச் சாதனங்களுக்குத் தடை விதிக்கக்கூடிய சாத்தியமான சிவப்பு மண்டலங்களை அடையாளம் காண நகர மன்றங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. 

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் சனிக்கிழமை இதனைத் தெரிவித்தார். 

இத்தகைய மண்டலங்களை அடையாளம் காணும் சாத்தியம் பற்றியும் வெவ்வேறான குடியிருப்பு பேட்டைகளில் இடம் பெறக் கூடிய இத்தகைய தடைப் பகுதிகள் தொடர்பான நிபந்தனைகளைத் தரப்படுத்துவது குறித்தும் நகர மன்றங்கள் அரசாங்கத்துடன் விவாதித்து வருவதாக  டாக்டர் லாம் குறிப்பிட்டார். 

நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040 சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் இவற்றைத் தெரிவித்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon