போலிசுக்குப் பொய்த் தகவல்: மாது கைது

போலிசுக்குப் பொய்த் தகவல்: மாது கைது

1 mins read

போலிசிடம் பொய்த் தகவலைத் தெரிவித்ததற்காக 50 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஜாலான் இஸ்மாயில் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் 15 பேர் சம்பந்தப்பட்ட மோதல் சம்பவம் நடப்பதாக போலிசுக்கு இம்மாதம் 24ஆம் தேதி பிற்பகல் சுமார் 1.20 மணிக்குத் தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் அங்கு சென்றபோது அப்படி மோதல் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மோதல் நடப்பதாக வந்த செய்தி பொய் என்பது தெரியவந்தது. கைகலப்பு நடந்ததாக போலிசிடம் பொய் சொன்ன மாதின் அடையாளம் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் அந்த மாது கைதுசெய்யப்பட்டதாகவும் புலன்விசாரணை தொடர்ந்து நடப்பதாகவும் போலிசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.