பாசிர் ரிஸ்ஸில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் மின்தூக்கிக் கூடத்தில் மெத்தை இருக்கைக்கு (சோஃபா) பதின்ம வயது இளைஞர் ஒருவர் தீ மூட்டிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இது பற்றி தான் விசாரித்து வருவதாக போலிஸ் அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்தது. பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51ல் இருக்கும் புளோக் 560ன் ஏழாவது மாடி மின்தூக்கிக் கூடத்தில் மூண்ட அந்தத் தீயில் எவருக்கும் காயம் இல்லை என்றும் போலிஸ் குறிப்பிட்டுள்ளது.
15 வயது பையன் தீ மூட்டி இருக்கிறான் என்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. தொடர்ந்து புலன்விசாரணை நடப்பதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.

