சுடச் சுடச் செய்திகள்

அனுபவம் கூறுகிறது: உறுதியுடன் தொடர் முயற்சி இருந்தால் சிகரெட்டை கைவிடலாம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31ஆம் தேதி கடைப்பிடிக் கப்படுகிறது. அதற்கு முன் சிங் கப்பூரின் மனநலக் கழகம் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. 

சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தை முற்றிலும் கைவிட உதவும் வகை யில் இரு ஆண்டுகளுக்கு முன் தேசிய அளவில் ஒரு சேவையை இந்தக் கழகம் தொடங்கியது. 

அந்தச் சேவை திட்டம் பற்றிய தகவல்களை முதல் தடவையாக இந்தக் கழகம் வெளியிட்டுள்ளது. 

சிகரெட்டை கைவிட விரும்பி கழகத்தின் செயல்திட்டத்தில் புதிதாக சேர்ந்த 109 பேரில் நாள் ஒன்றுக்கு 100 சிகரெட்டுகளைப் புகைத்தவர்களும் உள்ளனர். 12 வயதில் அந்தப் பழக்கத்தைத் தொடங்கியவர்களும் உண்டு. 

சுகாதார மேம்பாட்டு வாரியம் ‘நான் கைவிடுகிறேன்’ என்ற ஓர் இயக்கத்தை நடத்தி வருகிறது. முதல் முயற்சியாக 28 நாட்களுக் குச் சிகரெட்டைத் தொடப்போவ தில்லை என்ற உறுதியுடன் இந்த இயக்கத்தில் 20,000 பேருக்கும் மேற்பட்ட மக்கள் சேர்ந்தனர். 

ஆனால் 28 நாட்கள் சிக   ரெட்டை தொடாமலேயே இருந்தவர் கள் சுமார் 10%தான். சிகரெட் புகைக்கும் பழக்கத்தைத் தானே கைவிட முயன்று அதில் வெற்றி பெறுவது என்பது மிகவும் அரி தானதே என்று ஆய்வுகள் காட்டு கின்றன. 

இருந்தாலும் இந்த ஆய்வு முடிவை பொய்யாக்கி இருக்கிறார் 64 வயது பாலா (இயற்பெயர் அல்ல). பாலா 19 வயதில் நாள் ஒன்றுக்கு ஆறு சிகரெட்டுகளைப் புகைப்பார். காலம் செல்லச்செல்ல ஒரு கட்டத்தில் நாள் ஒன்றுக்கு 80 சிகரெட்டுகளைக்கூட அவர் புகைத்திருந்தார். 

“அந்தப் பழக்கத்தைச் சொந்த மாகக் கைவிட பல தடவை முயன்று இருக்கிறேன். அது மன ரீதியில் பெரும் தொல்லையானது. மிகவும் சிரமமானது,” என்கிறார் திரு பாலார். 

திருமணமாகாத பாலா தனி யாக வாழ்ந்து வருகிறார். அவ ருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. 

அதனால் உடல்நிலை மோச மடைந்தது. சிகரெட்டை கைவிட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு திரு பாலா ஆளாகினார். 

“புகைப்பது எனக்குப் பிடிக் காது. ஆனால் அது இல்லாமல் இருக்க முடியவில்லை,” என்றார் பாலா. உடல்நலம் மோசமடைகிறது என்பது எனக்குத் தெரியவந்தது. ஆனாலும் மனது தானாகவே சிகரெட்டை நாடியது. மனதள வில் இது பெரும் பிரச்சினை,” என்று திரு பாலா கூறினார். 

திரு பாலா எட்டு மாதங்களுக்கு முன் மனநலக் கழகத்தில் சிகரெட் டைக் கைவிடும் செயல்திட்டத் தில் சேர்ந்துகொண்டார். 

ஒரு மருத்துவரைக் கலந்து ஆலோசித்தார். மூன்று மாதம் நிக் கோட்டின் ஒட்டுத்துணியைப் பயன்படுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon