துடிப்பாக மூப்படைய வீவக பேட்டைகளில் பல ஏற்பாடுகள்

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல் லூரி மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் முதியோர் துடிப்பாக திகழும் வகையில் அவர்கள் வசிக் கும் பகுதிகளிலேயே பல்வேறு நட வடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்து உதவுவார்கள்.

கூட்டு உடற்பயிற்சி நிகழ்ச்சி கள், அறிவு சார்பான பயிலரங்கு கள், சுகாதார உரைகள் போன்ற பலவும் இவற்றில் இடம்பெறும்.

பொங்கோல், செங்காங், ஹவ் காங், பிடோக், தெம்பனிஸ், பாசிர் ரிஸ் போன்ற சிங்கப்பூரின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு இப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இவற்றுக்கு வகை செய்யும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்று வீட மைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல் லூரியின் மானிடவியல், சமூக அறிவியல் துறைக்கும் இடையில் ஏற்பட்டது.

தென்கிழக்கு மாவட்ட மேயரும் தற்காப்பு மற்றும் வெளியுறவு மூத்த துணை அமைச்சருமான டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், முன் னிலையில் நேற்று அந்தக் குறிப்பு வீவக சமூக வாரம் 2019ஐ ஒட்டி நடந்த கேளிக்கை நிகழ்ச்சி ஒன் றில் கையெழுத்தானது.

‘மூத்தோர் உடலுறுதி மற்றும் நல்வாழ்வுக் கேளிக்கை விழா நேற்று பிடோக் டவுன் ஸ்குவேரில் இப்புதிய இணக்கத்தின் முதல் நிகழ்ச்சியாக நடந்தது.

இதன்படி கழகம் மாணவர் களுக்குப் பல வாய்ப்புகளை வழங் கும். முதியோர் தொடர்பான ஆய்வுகளுக்குப் பணம் தரும்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாலிக்கி, இன்றைய சிங்கப்பூரில் எட்டு பேரில் ஒருவர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்கிறார். வரும் 2030ல் நான்கு பேரில் ஒருவர் இந்த வயது பிரிவைச் சேர்ந்தவராக இருப்பார் என்றார்.

ஆகையால் முதியவர்களால் சுகாதார, சமூக ஆதரவு முறை களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி களைக் குறைக்கும் வகையில், முதியோர் சுறுசுறுப்பாக உடல்நலத் துடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது முக்கிய மானது என்று அவர் கூறினார்.

நேற்றைய நிகழ்ச்சிக்குப் பின் னணியில் இருந்த மாணவர்கள் பலரும் மூப்பியல் துறையில் சமூக அறிவியல் பட்டயப் படிப்பை மேற் கொண்டு இருப்பவர்கள்.

கல்லூரியில் அவர்கள் படிப் பதை அடிப்படையாக வைத்து முதியோர் நலனுக்கு பலவற்றையும் அமல்படுத்த இந்தப் புரிந்துணர் வுக் குறிப்பு வகை செய்கிறது என்று இக்கல்லூரி மாணவர் மார்ட்டின் வாங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!