இரு வழித்தடங்களில் மின்தடை: விசாரணை

இரு வழித்தடங்களில் மின்தடை: விசாரணை

2 mins read

இரண்டு எம்ஆர்டி வழித்தடங் களில் நேற்று மின்தடை ஏற்பட் டது. அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரி வித்து உள்ளது.

வடக்கு-தெற்கு வழித்தடத் தில் உள்ள ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்தில் அதி காலை 4.45 மணிக்கு மின்சாரப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அத னால் ரயில் சேவை தொடங்கிய போதே சேவைகள் மெதுவடைந்த தாகவும் எஸ்எம்ஆர்டி கூறியது.

நியூட்டன் நிலையத்திற்கும் மரினா சௌத் பியர் நிலையத் திற்கும் இடையில் பயண நேரம் 30 நிமிடம் கூடும் என்று எஸ்எம்ஆர்டி காலை சுமார் 6.30 மணிக்குத் தகவல் தெரிவித்தது.

இலவச பேருந்துச் சேவையும் தயார்படுத்தப்பட்டது.

மின்சாரப் பிரச்சினை ஏற்பட்ட உடனேயே பொறியாளர்கள் களத்தில் இறங்கி குறைகளைச் சரிப்படுத்த முயன்றதாகவும் சேவைகள் காலை 7.25 மணி முதல் படிப்படியாக வழக்கத் திற்கு திரும்பியதாகவும் நிறு வனம் தெரிவித்தது.

இதனிடையே, காலை சுமார் 7.35 மணிக்கு வட்ட ரயில் பாதை யில் மின்சாரம் தடைபட்டு பிரச் சினை ஏற்பட்டது. இதன் காரண மாக மரினா பே நிலையத்திற்கும் பேஃபிராண்ட் நிலையத்திற்கும் இடையில் சேவை தடைபட்டது.

இதனால் மீண்டும் இலவச பேருந்துச் சேவை முடுக்கிவிடப் பட்டது. இந்த மின்தடை காலை 8 மணிக்கு முன்பே சரிசெய்யப் பட்டு சேவைகள் வழக்க நிலைக் குத் திரும்பின.

பிறகு எஸ்எம்ஆர்டி நிறுவனம் காலை 8.26 மணிக்கு டுவிட்டரில் ஓர் அறிவிப்பு விடுத்தது. வடக்கு-தெற்கு வழித்தடத்தில் மின்சாரம் தடைபட்டு இருப்பதா கவும் அதன் காரணமாக மரினா சௌத் பியர் நிலையத்திற்கும் ஆர்ச்சர்ட் நிலையத்திற்கும் இடை யில் சேவைகள் நிறுத்தப்பட்ட தாகவும் அது தெரிவித்தது.

இதற்கு அந்த வழித்தடத்தில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த மின் தடையே காரணம் என்று இந்த நிறுவனம் பிறகு விளக்கியது.

சுமார் 30 நிமிடம் கழித்து காலை சுமார் 8.50 மணிக்கு எஸ்எம்ஆர்டி விடுத்த அறிவிப்பில் ரயில் சேவைகள் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பிவிட்ட தாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கமான இலவச பேருந்துச் சேவைகளும் இலவச இடைவழிச் சேவைகளும் நடப்பில் இருந்தன. மாற்று போக்குவரத்து ஏற்பாடு களை நாடும்படி பயணிகளுக்கு ஆலோசனையும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்காக மன் னிப்புக் கேட்டுக்கொண்ட எஸ்எம்ஆர்டி, மரினா சௌத் பியர் நிலையத்துக்கும் ஆர்ச்சர்ட் நிலையத்துக்கும் இடைப்பட்ட ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடங்கிவிட்டதாகவும் இலவச பேருந்துச் சேவைகள் நிறுத்தப்படு வதாகவும் பிறகு அறிவித்தது.