ஹெங்: அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட முடியும்

அமைதியையும் நிலைத்தன்மையை யும் உறுதிசெய்வதில் தவிர்க்க முடியாத சக்திகளாக விளங்கி வரும்  அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசலுக்கு மத்தியில் வேறு பல துறைகளில் அவ்விரு நாடுகளும் ஒத்துழைக்க முடியும் என்று சிங்கப்பூர் நம்புவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடை யிலான உறவை ‘போட்டியிலும் ஒத்துழைப்பு’ எனக் குறிப்பிட்ட திரு ஹெங், “புத்தாக்கத்தைத் தூண்டி, வளர்ச்சியை முன்னெ டுக்கும் விதமாக இருந்தால் போட்டியும் ஆக்ககரமானதாக விளங்கும்,” என்றார்.

மாறாக, மோதலுக்கும் பகை மைக்கும் வித்திட்டால் அது சீர்குலைக்கும் ஆற்றலாக மாறும் அபாயம் உள்ளது என்று நிதி அமைச்சருமான ஹெங் கூறினார்.

சீனாவின் ஷங்ஹாய் நகரில் அமைந்துள்ள சீன நிர்வாக தலைமைத்துவப் பயிலகத்தில் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா - சீனா இடையே வா‌ஷிங்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, உலகின் ஆகப் பெரிய பொருளியல் சக்தி களாக விளங்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

இரு நாடுகளும் ஒரு நாட்டில் இருந்து மற்றொன்றுக்கு இறக்கு மதி செய்யும் பொருட்களுக்கான வரியை உயர்த்தி அறிவித்தன. அத்துடன், உலகின் ஆகப் பெரிய இரண்டாவது கைபேசி சந்தையை வைத்துள்ள சீனாவின் ஹுவாவெய் நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடைவிதித்தது. பின் அந்தத் தடையை 90 நாட் களுக்குத் தள்ளிவைத்தது.

சீனா-அமெரிக்கா உறவுகளே உலகின் ஆக முக்கியமான இரு தரப்பு உறவுகளாக இருந்து வரும் சூழலில் அவ்விரு நாடு களுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது என்றார் துணைப் பிரதமர் ஹெங்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon