சொந்த நாட்டைவிட்டு சிங்கப் பூருக்குக் குடிபெயர்ந்து, தாங்க ளும் தங்களது குடும்பங்களும் வாழ ஒரு வழிதேடிக்கொண்டு நாட்டையும் முன்னேற்றிய நமது மூதாதையர், தம்மோடு கொண்டு வந்த பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் ஒட்டுமொத்த மாக சிங்கப்பூர் கலாசாரத்திற்குச் செறிவூட்டின என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பல்வேறு இனத் தவரின் திருமணங்கள் கால ஓட்டத்தில் எத்தகைய மாற்றங் களைச் சந்தித்தன என்பதை விளக்கும் நிகழ்வு டெக் கீ சமூக மன்றத்தில் நேற்று நடந்தது. சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவையொட்டி அங் மோ கியோ குழுத் தொகுதியும் செங்காங் வெஸ்ட் தனித்தொகுதி யும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ, "ஒவ்வோர் இனமும் பிரத்தி யேகமான திருமண மரபுகளைக் கொண்டுள்ளன. நமது மூதாதை யரின் பாரம்பரியங்களைத் திரு மண விழாக்கள் பிரதிநிதிக்கின் றன. அவற்றை நினைவுகூர்ந்து, எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டுசெல்வது மதிப்புமிக்க செயல்," என்றார் திரு லீ.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல தம்பதியரும் தங்களது காதல் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

