சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட தனது 'பிஎம்டபள்யூ' காரின் பெட்ரோல் தொட்டியை நிரப்பக் காத்திருந்த அதன் ஓட்டுநர், காரின் பதிவு எண் பலகையை மாற்றியதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மே 18ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகக் கூறிய நிலப் போக்குவரத்து ஆணையம், காரின் உரிமையாளர் இது குறித்து தம்மிடம் விளக்க அறிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் கூறியது. மே 18ஆம் தேதி காலை 7.30 மணி வாக்கில் ஜோகூரின் கேலாங் பத்தாவிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. கார் ஓட்டுநர் 'எஸ்எல்எக்ஸ்27இ' (SLX27E) என்ற தனது பதிவு எண் பலகையை, 'எஸ்கேடி2777சி' (SKD2777C) என்ற பதிவு எண் கொண்ட பலகைக்கு மாற்றினார். அதன் பிறகு அவர் தனது காரை மலேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறிய வேகத்தில் ஓட்டி போக்குவரத்து போலிசாரிடம் பிடிபட்டார். ஆனால் அவருக்குக் கொடுக்கப்படவேண்டிய 150 ரிங்கிட் (49 வெள்ளி) அழைப்பாணை, உண்மையிலேயே 'எஸ்கேடி2777சி' பதிவு எண்ணைக் கொண்ட ஹியூண்டாய் கார் ஓட்டுநருக்குக் கிடைத்தது. பதிவு எண் பலகையை அந்த ஓட்டுநர் மாற்றியதை மற்றொரு காரில் உள்ள கண்காணிப்புக் கேமரா காணொளி எடுத்தது.
ஜோகூர் பாருவில் காரின் பதிவு எண் பலகையை மாற்றிய சிங்கப்பூரர்
1 mins read
-

