பல்கலைக்கழகக் கழிவுகளை மின்சாரமாக்கும் புதிய ஆலை

பல்கலைக்கழகக் கழிவுகளை மின்சாரமாக்கும் புதிய ஆலை

2 mins read
fc267556-4fbd-42b0-98b5-f3de9f09fde0
சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (இடமிருந்து 2வது), நன்யாங்  தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தலைவர் சுப்ரா சுரேஷ் (இடமிருந்து 3வது) இருவரும் ஆலையைப் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  -

துவாஸ் சௌத்தில் அமைந்துள்ள புதிய எரி ஆலை, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தில் (என்டியு) சேகரிக்கப்படும் குப்பைக்கூளங்களை எரித்து பயன்தரக்கூடிய மின்சாரமாகவும் கட்டுமானத்துறை சாதனங்களாக வும் உருவாக்கும்.

அந்தப் புதிய $40 மில்லியன் ஆலையை சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சர் மசகோஸ் ஸுல் கிஃப்லி நேற்றுத் தொடங்கிவைத் தார்.

அந்த ஆலைக்குத் தேசிய ஆய்வு அறநிறுவனம், தேசிய சுற்றுப்புற வாரியம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை ஆதரவளிக்கின்றன.

துவாஸ் சௌத் எரி ஆலையில் நாள் ஒன்றுக்கு 11 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைக்கூளங்களை எரிக்க முடியும். கழிவுப் பொருட்கள் சிதைக்கப்பட்டு உலர வைக்கப் பட்டு எரிவாயுவாகவும் இதர பய னீட்டுப் பொருட்களாகவும் மாற்றப் படுகின்றன.

இந்த நடைமுறைக்கு 'வளிமய மாக்கல்' என்று பெயர். கரிம அல் லது மக்கிய பொருட்கள் கார்பன் மோனாக்சைடாக, ஹைட்ரஜனாக, கரியமில வாயுவாக மாற்றப் படுகிறது.

கழிவுப் பொருட்களில் கரியும் சேர்த்து எரிக்கப்படுவதால் இந்த ஆலை 1,600 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை ஏற்படுத்தும். இந்த ஆலையில் ஏதிர்காலத்தில் மருத்துவ மற்றும் ஆபத்தான கழிவுப்பொருட்களும் எரிக்கப்பட்டு பயனுள்ள பொருட் களாக மாற்றப்பட வாய்ப்பு இருக் கிறது.

இத்தகைய அதி வெப்பநிலை யில் குப்பைக் கூளங்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு, ஹைட் ரஜன் கலந்த ஒரு வகை வாயு உருவாகும். இந்த வாயுவைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம்.

அல்லது மறுபுழக்கத்திற்கு உத வக்கூடிய கலப்பு உலோகங்களை யும் உருவாக்கலாம். மணல், கான் கிரீட்டுக்கு மாற்றாகப் பயன்படக் கூடிய பொருளைத் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்த முடியும்.

"இந்தப் புதிய ஆலை நமக்கு நேரடியாக பலவற்றையும் போதிக் கிறது. நடைமுறை பயிற்சியையும் வழங்குகிறது.

"இவற்றின் மூலம் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் துறையில் நமது ஆற்றல் மேம்பட உதவி கிடைக்கும்," என்று அமைச்சர் இந்த ஆலையைத் தொடங்கி வைத்து உரையாற்றியபோது தெரி வித்தார்.