காக்கி புக்கிட் பகுதியிலுள்ள தொழிலியல் கட்டடத்தில் தீ

காக்கி புக்கிட் பகுதியிலுள்ள தொழிலியல் கட்டடத்தில் தீ

1 mins read
34d2bff6-da09-457f-9b80-8ae25efb6ed2
படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் -

காக்கி புக்கிட்டில் உள்ள தொழிலியல் கட்டடம் ஒன்றில் நேற்று தீ மூண்டது. 175 காக்கி புக்கிட் அவென்யூ 1 முகவரியில் உள்ள அக்கட்டடத்தில் பிற்பகல் 3.10 மணிக்கு தீ மூண்டதாக சிங் கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பிற்பகல் 4.12 மணிக்கு தனது ஃபேஸ்புக்கில் கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பக்கத்தில் இருந்தவர் களை இந்தப் படையினரும் போலிசாரும் அப்புறப்படுத்தினர். தீ பிறகு அணைக்கப்பட்டது.

குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது 2வது மாடியில் தீ எரிந்துகொண்டு இருந்தது.